Posts

ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1. Dravidian language family

Image
ஓன்பதாம் வகுப்பு தமிழ் முதல் பருவம்  தேர்வு களுக்கான வினா வினா?  விடை பகுதி..! 1 . அமுதென்று பேர்  ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட  மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1.  Dravidian language family I. குறு வினா 1.  நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது? நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது. II. சிறு வினா 1. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக. திராவிடமொழிகளின் பிரிவுகள் : ★ தென்திராவிட மொழிகள் ★ நடுத் திராவிட மொழிகள் ★ வட திராவிட மொழிகள் தமிழின் தனித்தன்மைகள் : ◆ தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும். ◆ இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ் ◆ பிற திராவிட மொழிகளை விட தனித்த  இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ் ◆ பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும் 2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் ...

6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ்

Image
BrightZoom Tamil Notes , Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 வளர்தமிழ் கற்பவை கற்றபின் 1. மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ் என்பது பற்றிக் கலந்துரையாடுக . Answer: மாணவர்களைக் கால மாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்மொழி பற்றிப் பேசச் செய்தல். மாணவன் 1 : வணக்கம். நம் தமிழ்மொழியானது காலத்திற்கேற்றார்போல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை . ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல இலக்கியங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கண வளங்களால்தான் அழியா நிலை பெற்றுள்ளது எனலாம். மாணவன் 2 : அதுமட்டுமா? ஒலியாகத் திரிந்து சித்திரமாய் மாறி பல மொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப்பல எடுத்தும் காலம் பல கடந்து கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டும் ஓலைச்சுவடிகளில் வரையப்பட்டும் தற்போது காகிதங்களில் மிளிர்ந்து கொண்டும் உள்ளது நம்தாய் மொழியாம் தமிழ். இது காலச்சூழல் மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் சிறப்பு பெற்றது. மாணவன் 1 : பிறமொழிகள் தங்கள் தொ...

6 th tamil Notes, Lesson-1.2 தமிழ்க்கும்மி Book back Questions and answer - Guide

Image
Bright Zoom 6 th tamil Notes, Lesson-1.2 தமிழ்க்கும்மி  Book back Questions and answer - Guide 1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க. Answer: தமிழ்க்கும்மி பாடலை இசை நயத்தோடு பாடச் செய்தல் கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் — அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர் மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த மேதினி வாழவழி காட்டிருக்கும்!                                        -  பெருஞ்சித்திரனார் பொருளுரை இளம்பெண்களே! எட்டுத் திசைகளிலும் தமிழின் புகழ் பரவவிடுமாறு கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம்.பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவைப் பெருக்கும் பல நூல்களைப் பெற்றுள்ள மொழி. பெரும் கடல் சீற்றங்களினாலு...

6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

Image
Bright Zoom  Tamil Notes 6th Tamil samacheer book 6th Tamil Notes Tamilnadu Samacheer Kalvi  முதல் பருவம் 6th Tamil Solutions Chapter 1.1  இன்பத்தமிழ் கற்பவை கற்றபின் 1.இன்பத்தமிழ் என்ற பாடலை இனிய ஓசையுடன் பாடுக. Answer: கீழ்க்காணும் பாடலைக் குரலேற்ற இறக்கத்துடன் இனிமையாகப் பாடச் செய்தல். 1.இன்பத்தமிழ் தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் ! பொருளுரை : இனிக்கும் அமுதத்தை ஒத்திருப்பதால் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றதாக...